புலம்பெயர் தமிழர்களுக்கு அஞ்சி பதவி விலக வேண்டாம்; மஹிந்தவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்!
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அரசாங்கத்திற்கு எதிராகவும்,பிரதமர் பதவி விலக வேண்டும் எனவும் மக்கள் தொடர்ந்து ஒரு மாதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யக்கூடாதென வலியுறுத்தி, அலரிமாளிக்கைக்கு முன்பாக தற்போது மஹிந்தவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
புலம்பெயர் தமிழர்களுக்கு அஞ்சி பதவி விலக வேண்டாம் என அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களாலேயே, முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
போரை முடிவுக்கு கொண்டுவந்த மஹிந்த ராஜபக்ச நாட்டுக்கு தேவை, அவர் பதவி விலகக்கூடாது என போராட்டக்காரர்கள் ஆதரவு கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில் பங்கேற்ற பிரதேச சபை தலைவர் ஒருவர் தெரிவிக்கையில், தமிழ் டயஸ் போராக்களின் பணத்தை பெற்றே கோல்பேஸில் போராட்டம் இடம்பெறுகின்றது.
இதன் பின்னணியில் முன்னிலை சோசலிசக் கட்சியும் செயற்படுகின்றதாகவும் தெரிவித்த எனவே, இத்தரப்புகளுக்கு அஞ்சி அடிபணித்து ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பதவி விலகக்கூடாது எனவும் அவர் கூறினார்.