அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்! (Video)
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் போராட்டம் வெடித்ததுடன் அங்காங்கே வன்முறைகளும் இடம்பெற்றிருந்தது.
இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நாட்டைவிட்டு வெளியேறி சென்றதுடன் தனது பதவியையும் இராஜினாமா செய்திருந்தார். தொடர்ந்து நாடாளும்ன்றில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி காலி முகத்திடலில் தொடர் போராட்டத்தில் இருந்தவர்களை படையினர் அப்புறப்படுத்தியிருந்ததுடன், போராட்டத்தின்போது அரச சொத்துக்களை சேதம் விளைவித்தவர்களும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று போராட்டகாரர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,