கொழும்பில் பெரும் அளவில் குவிக்கப்பட்ட பொலிஸார்!
கொழும்பில் களனி பல்கலைக்கழக மாணவர்கள் அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்ட பேரணி மாணவ சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களான கெழும் மற்றும் டில்ஷான் ஆகியோரை உடனடியாக விடுவிக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணி களனி பல்கலைக்கழக பகுதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாணவர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் (Ranil Wickremesinghe) உருவப் பொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
பதற்றமான சூழ்நிலை நீடிப்பதால் குறித்த பகுதியில் பெரும் திரளான பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.