மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Mannar Sri Lankan Peoples SL Protest NPP Government
By Sulokshi Jun 11, 2025 08:04 AM GMT
Sulokshi

Sulokshi

Report

 மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில், காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (11) ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.

கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் காலை 9.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது. இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தை மன்னார் பிரஜைகள் குழு மற்றும் சிவில், பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்தது.

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் | Demonstration Against Wind Power Generation Mannar

காற்றாலை மின் உற்பத்தி ,கனிய மணல் அகழ்வை உடனடியாக நிறுத்து

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆரம்பமான இந்த பேரணி, பிரதான வீதியூடாக சென்று மன்னார் பஜார் பகுதியை அடைந்து மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் ஒன்றுகூடி பதாதைகளை ஏந்தியவாறு பலவாறு கோஷம் எழுப்பினர்.

“மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையிலான காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வை உடனடியாக நிறுத்து”, “எங்கள் மண்ணை சுடுகாடாக்காதே”,

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் | Demonstration Against Wind Power Generation Mannar

“அடிக்காதே, அடிக்காதே எங்கள் வயிற்றில் அடிக்காதே” உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு இந்த கவனயீர்ப்புப் பேரணியில் பங்கேற்றனர்.

இந்த பேரணியில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஞானப்பிரகாசம் அடிகளாரும் வருகை தந்திருந்தார்.

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் | Demonstration Against Wind Power Generation Mannar

இந்நிலையில், மன்னார் மக்கள் எதிர்நோக்கும் இந்த இரு பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு அளிக்கவேண்டிய மகஜரினை, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிடம் மன்னார் ஆயர் மற்றும் சர்வமத தலைவர்கள் இணைந்து கையளித்தனர்.

மகஜரை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர், மன்னார் மாவட்ட மக்கள் நீண்ட காலமாக காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறித்து நான் நன்கறிவேன்.

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் | Demonstration Against Wind Power Generation Mannar

மக்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் சர்வமத தலைவர்கள் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கும் வகையில், என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதனை நான் உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பேன் என தெரிவித்தார்.

மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு பேரணியில் மன்னார் மாவட்டத்தில் உள்ள சிவில் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சர்வமத தலைவர்கள், வர்த்தகர்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக ஆயிரக்கணக்கான மக்களும் பங்குகொண்டனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US