ஜனாதிபதி ரணிலுக்கு வாழ்த்து தெரிவித்த கட்சி!
இலங்கையின் 8வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) ஜனநாயக போராளிகள் கட்சி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யபட்டிருக்கிறார். அவர்களுக்கு எமது வாழ்துக்களை எங்களது மக்கள் சார்பாக தெரிவித்துகொள்கிறோம்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் மக்களின் அன்றாட வாழ்வியல் சுமைகள் அரசியல் இஸ்திரமற்ற நிலைகளில் இருந்து இலங்கை விரைந்து மீண்டுவர செயலாற்றுவீர்கள் என திடமாகநம்புகிறோம்.
தங்களது தலைமையிலாவது இனங்களுக்கிடையே புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சனைக்கான தீர்வுகளை தீர்ப்பதற்கான நெறிமுறைகளை கையாளுவீர்களென தமிழ்மக்கள் சார்பாக கேட்டு நிற்கின்றோம். என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.