தெமட்டகொட ஆயுதக் களஞ்சியசாலை; மறைந்திருந்த இளம் தம்பதி கைது
தெமட்டகொட பகுதியில் 19 துப்பாக்கிகள், 24 ரவைகள் மற்றும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகளைக் கைப்பற்றிய சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான ஆணும் பெண்ணும், கைது செய்யப்பட்டுள்ளனர்.
கதிர்காமத்தில் உள்ள தங்குமிடம் ஒன்றில் மறைந்திருந்த நிலையில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள், வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய தம்பதியினர் ஆவர்.

தப்பிச் சென்றிருந்த தம்பதியினர்
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று, கடந்த 3 ஆம் திகதி தெமட்டகொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மீட்கப்பட்டிருந்தது.
இதன்பூது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 19 'டி-கட்டஸ்' (T-Katas) ரகத் துப்பாக்கிகள், 24 ரக டி-56 ரவைகள், 100,400 போதை மாத்திரைகள் மற்றும் 15 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் ஆகியவற்றுடன் இரு சந்தேக நபர்களையும் இரு சந்தேகப் பெண்களையும் கைது செய்திருந்தது.
அந்தச் சந்தர்ப்பத்தில், இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரும் சந்தேகப் பெண்ணும் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர். மேலும் சந்தேக நபர்களால் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.