கேரளாவில் இயற்கையின் கோர தாண்டவம்; வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் வீடுகள்
இந்தியாவின் கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருவதனால் வெள்ளத்தில் வீடுகள் அடித்துச்செல்லப்படும் காணொளி வெளியாகியுள்ளது. இந்த வெள்ல அனர்த்தில் இதுவரை 23 பேர் பலியானதாக கூறப்படும் நிலையில் மீட்பு பணியில் முப்படையினரும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, பத்தனம்திட்டா உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கொட்டும் மழையினால் தாழ்வான பகுதிகள் அனைத்தும்வெள்ளக்காடாக மாறியுள்ளன.
பல இடங்களில் வீடுகள், கட்டிடங்கள் அனைத்தும் மூழ்கியுள்ளதுடன் குடியிருப்பு பகுதிகளில் பல அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மாநிலத்தின் பிரதான அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன.
அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பல அணைகளில் அபாய அளவை தாண்டி நீர் மட்டம் உயர்ந்து வருகிறதாகவும் கூறப்படுகின்றது.
#WATCH | Kerala: A house got washed away by strong water currents of a river in Kottayam's Mundakayam yesterday following heavy rainfall. pic.twitter.com/YYBFd9HQSp
— ANI (@ANI) October 18, 2021
இதேவேளை கேரளா மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டில் ஏற்பட்ட மழை-வெள்ளத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ள தற்போதைய மழை சேதங்கள் மக்களின் வாழ்வாதாரத்தையும், இயல்பு வாழ்க்கையையும் முடக்கி போட்டுள்ளது.
இந்த நிலையில் மாநிலத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் , வெள்ளத்தில் சிக்கிய மக்களை உடனடியாக மீட்க அதிகாரிகளை அறிவுறுத்திய அவர், நிவாரண உதவிகளையும் வேகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.