கொழும்பு பகுதியில் 5 சீனப் பிரஜைகள் அதிரடி கைது! சிக்கிய பொருட்கள்
தெஹிவளையில் 5 சீனப் பிரஜைகள் உட்பட இலங்கையர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்ப்பட்டுள்ளார்.
தெஹிவளையில் இணையக் கடன் வழங்கும் நிலையம் ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது குறித்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத்துறையின் இணையக் குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் விளைவாக, நிறுவனத்திடமிருந்து 8 கணினிகள், 13 மடிக்கணினிகள் மற்றும் 41 தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இது தொடர்பான முறைப்பாடுகள் ஏதேனும் இருந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது குற்றப் புலனாய்வுத்துறையின் இணையக் குற்றப்பிரிவிலோ தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.