டீப்சீக் (DeepSeek) நுண்ணறிவு செயலிக்கு வந்த சோதனை
உலகளவில் AI தொழில்நுட்பத்தில் சீனாவின் டீப்சீக் AI (DeepSeek) முக்கிய பேசு பொருளாக அமைந்துள்ளது. சீனாவில் உருவாக்கப்பட்ட டீப்சீக் (DeepSeek) செயற்கை நுண்ணறிவு செயலி, உலகளவில் பிரபலமடைந்த நிலையில், பல நாடுகள் அதன் பயன்பாட்டை கட்டுப்படுத்தியுள்ளன.
டீப்சீக் செயலியின் பயன்பாடு
தென்கொரியா பயனர்களின் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு தொடர்பான சிக்கல் காரணமாக, டீப்சீக் செயலியின் பயன்பாட்டை அந்நாட்டின் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு தடை செய்துள்ளது.
இத்தாலி, இந்தியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளும், அரசாங்க அலுவலகங்களில் டீப்சீக் செயலியின் பயன்பாட்டை தடை செய்துள்ளன. இந்த நடவடிக்கைகளுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டீப்சீக் (DeepSeek) நுண்ணறிவு செயலி தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை காரணமாக கொண்டு பல நாடுகளில் இச் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் டீப்சீக் AI முன்னேற்றம், உலகளவில் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியையும், அதனைச் சுற்றியுள்ள அரசியல் மற்றும் பொருளாதார சூழலையும் மாற்றும் வகையில் உள்ளது. டீப்சீக் செயலி, அமெரிக்காவின் ஆப்பிள் ஆப் ஸ்டோரில், சாட் ஜிபிடியை பின் தள்ளி, முன்னணி இலவச செயலியாக உருவெடுத்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது