மனநலத் தூதராகத் தீபிகா படுகோன் ; இணையவாசிகள் அதிருப்தி
இந்தியாவின் முதல் மனநலத் தூதராக நடிகை தீபிகா படுகோன் (Deepika Padukone) தேர்வாகியிருக்கிறார். உலக மனநலத் தினத்தை முன்னிட்டு இந்தியாவின் மத்திய சுகாதார குடும்ப நல அமைச்சு அதனை அறிவித்தது.
இந்நிலையில் மனநலத் தூதராகத் தீபிகா படுகோன் தேர்வாகியுள்ளமைக்கு இணையவாசிகள் தற்போது அது குறித்து அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
மன நலத்தைப் பேணுவதற்கு வகுக்கப்பட்ட வளங்களைக் குறித்து தீபிகா படுகோன் (Deepika Padukone) விழிப்புணர்வு ஏற்படுத்துவார். வளங்களை மக்களிடம் கொண்டு செல்லவும் தீபிகா படுகோன் (Deepika Padukone) உதவுவார் என்று சொல்லப்பட்டது.
அந்தப் பணிகளுக்குத் தீபிகா படுகோன் (Deepika Padukone) தகுதியானவர் இல்லை என்றும்ஒரு மருத்துவர் அல்லது மனநல நிபுணருக்கு அந்தப் பதவியைத் தந்திருக்கவேண்டும் என்றும் இணையவாசிகள் குறிப்பிட்டனர்.