இலங்கையை உலுக்கிய துயரம்; பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு
Sri Lankan Peoples
Death
Water
By Sulokshi
கொபெய்கனே பகுதியில் தெதுறு ஓயாவில் மூழ்கி காணாமல் போயிருந்த ஏனைய இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்படி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
இன்று (17) காலை காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய இருவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. தற்போது அந்த இருவரினதும் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

கடவத்தை பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர் கொபெய்கனே பகுதியில் உள்ள தமது உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
பின்னர் அந்த வீட்டைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து 15 பேர் கொண்ட குழுவாக தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற போதே இந்தச் சோகமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US