பாலத்துக்கு அடியில் சிதைவடைந்த சடலம் ; அம்பாறையில் பரபரப்பு
அம்பாறை , அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்துக்கருகில் உள்ள ஆற்றில் இன்று (18) ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆற்றில் மீனவர்கள் சிலர் மீன் பிடிக்கச் சென்ற வேளையிலேயே சடலத்தை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

ஆரம்பக்கட்ட விசாரணை
உயிர்ழந்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் சடலம் தொடர்பில் அடையாளம் காண அக்கரைப்பற்று பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சுமார் 5 அடி 6 அங்குலம் உயரம் மற்றும் சுமார் 45 வயது முதல் 50 வயது வரை மதிக்கத்தக்க சடலத்தை அக்கரைப்பற்று பொலிசாருடன் இணைந்து அம்பாறை தடயவியல் பிரிவு பொலிசார் பொதுமக்களின் உதவியுடன் சடலத்தை கரைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் இனங்காண முடியாத வகையில் சிதைந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
அதேவேளை அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் காணாமல் சென்ற நபர்கள் தொடர்பில் எதுவித முறைப்பாடுகளும் இல்லை என்பதுடன் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.