இன்று காவு கொடுக்கப்பட்ட மரணங்கள்; யார் காரணம்?
இன்றுகாலை இலங்கையில் இடம்பெற்ற பெரும் துயரம். பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் முதல் பயணித்தவர்களில் பெரும்பாலானவர்களை காவு கொண்ட கிண்ணியா படகு விபத்து முழு நாட்டையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் , புதிய பாலம் கட்டித் தருவதாக பழைய பாலம் உடைக்கப்பட்டது. ஒரு வருடத்தில் புதிய பாலம் கட்டித் தருவதாக அரசியல்வாதிகளால் வாக்குறுதியும் வழங்கப்பட்டது. பல வருடங்கள் ஆகியும் பாலத்தின் பணிகள் முடிந்த பாடில்லை.மாற்றுப் பாதைகளும் அமைத்துக் கொடுக்கப் படவில்லை.
ஒப்பந்தக்காரரின் குற்றச்சாட்டு மாற்றுப் பாதைகள் (Subway) அமைப்பதற்காக அரசாங்கம் நிதி ஒதுக்கவில்லை என்கிறார். அரசினாலும் அரசியல்வாதிகளினாலும் அந்தப் பகுதி மக்களுக்கு போக்குவரத்துக்கான மாற்று வழிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை.
தனியாரால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாதை (படகு) அந்த ஆற்றிலே நீண்ட நாட்களாக மக்களை ஏற்றி இறக்கி வந்துள்ளது.அந்தப் பாதையில்( படகில்) எத்தனை பேரை ஏற்றலாம் என்ற வரையறை கூட கிடையாது. போக்குவரத்து பொலிஸாரின் மேற்பார்வை கிடையாது.
Safety jacket வசதிகள், அதில் பயணம் செய்பவர்களுக்கான பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லை. இவற்றையெல்லாம் கிண்ணியாவில் இருக்கும் மும்மூர்த்தி அரசியல் வாதிகளும் நன்கு அறிவார்கள்.
அரசியல் வாதிகள், புத்திஜீவிகள், கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என ஒட்டுமொத்த ஊரினாலும் கவனிப்பாரற்றுக் கிடந்த இந்தப் போக்குவரத்து பாதை (படகு) இன்று விபத்துக்குள்ளாகி நீரில் மூழ்கிய பின்னர்தான் எல்லோருக்கும் ஞானம் பிறக்கத் தொடங்கியுள்ளது.
வாழ்க அரசியல்...கிண்ணியா பெரும் துயரில் ....மனது கனக்கிறது. கிண்ணியா வாசியொருவரின் முகநூல் பதிவிலிருந்து...