உறவினரின் அஸ்தியை கரைக்க சென்ற இளைஞனுக்கு நேர்ந்த சோகம் ; தவிக்கும் குடும்பத்தினர்
உறவினர் அஸ்தியை ஆற்றில் கரைக்க சென்ற எலக்ட்ரீசியன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ஒருவர் கடந்த 19ந் திகதி குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மீட்பு பணி
இதையடுத்து அவரது அஸ்தியை காவிரி ஆற்றுக்கு உறவினர்கள் 35 பேர் சென்றனர். உறவினர்கள் அனைவரும் காவிரி ஆற்றங்கரையில் ஈமச்சடங்கில் கலந்து கொண்டு அஸ்தியை கரைத்துள்ளனர்.
பின்னர் உறவினர்கள் அனைவரும் ஆற்றில் குளிக்க சென்றனர். இவர்களில், திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் விஜய் (24) என்ற உறவினரும் வந்திருந்தார்.
அவர் கிழக்குக்கரையில் இருந்து மேற்கு கரை வரை நீந்தி சென்றபோது நடு ஆற்றில் நீந்த முடியாமல் விஜய் மூச்சு திணறி நீரில் மூழ்கினார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.
அங்கு அவர்கள் மீன்பிடி தொழிலாளர்கள் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி நீரில் மூழ்கிய எலக்ட்ரீசியன் விஜய்யின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.