ஹட்டன் பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு
ஹட்டன் - டிக்கோயா பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.
கடந்த புதன்கிழமை, டயகமவிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று டிக்கோயா பட்டல்கல பகுதியில், வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.

விபத்தில், காயமடைந்த சுமார் 34 பேர், அருகிலுள்ள கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். முன்னதாக, இந்த விபத்தில் படுகாயமடைந்திருந்த அக்கரப்பத்தனை, வௌர்லி பகுதியைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இந்த விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 66 வயதான மற்றுமொருவர், நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது இரண்டாக உயர்வடைந்துள்ளது.