சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்திய சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் 211 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

சீரற்ற வானிலை
நிலவிய சீரற்ற வானிலையினால் நாட்டின் 25 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 473,138 குடும்பங்களைச் சேர்ந்த 1,637,960 நபர்கள் இதனால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
அத்துடன், 26,103 குடும்பங்களைச் சேர்ந்த 82,813 நபர்கள் தொடர்ந்தும் 847 பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஏற்பட்ட அனர்த்தங்களினால் 5,713 வீடுகள் முழுமையாகவும், மேலும் 104,805 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.