பாகிஸ்தானின் அணு ஆயுத தந்தை மரணம்
பாகிஸ்தானின் அணு ஆய்த தந்தை என அழைக்கப்படும் காதிர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.
பாகிஸ்தான் நாட்டின் அணு விஞ்ஞானியான அப்துல் காதிர் கான்(85) அவர்கள் பாகிஸ்தான் நாட்டின் முதல் அணுகுண்டை உருவாக்கியவர் என்பதால் இவரை பாகிஸ்தான் நாட்டின் அணு ஆயுத தந்தை என அழைக்கப்பட்டு வந்தார்.
மேலும் பாகிஸ்தான் நாட்டை அணுசக்தி நாடக மாற்றியதில் முக்கிய பங்கு வகித்தார். இந்த சொல்லலில் கடந்த 2004ம் ஆண்டு நாட்டின் அணு ஆயுத ரகசியத்தை வடகொரியாவுக்கு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
அதன் பிறகு 2009ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த சில நாடுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்ட காதி கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதனையடுத்து இன்று காலை அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.