இலங்கையில் மாற்றமடையும் இறப்புச்சான்றிதழ்!
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, பல்வேறு விடயங்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள புதிய இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய சுகாதார அமைச்சு, நீதி அமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த இறப்புச் சான்றிதழை தயாரித்துள்ளதாக அகில இலங்கை மரண விசாரணை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுர ஹேரத் தெரிவித்துள்ளார்.

இறப்புச்சான்றிதழில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள்
12 பிரதான விடயங்கள், 24 உப விடயங்களை உள்ளடக்கியதாக இந்த இறப்புச் சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை மரணத்திற்கான காரணம், இயற்கை மரணமா இல்லையா என்பனவே இதுவரை வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது, உயிரிழந்த நபர் தொடர்பிலும் மரணத்திற்கான காரணம் தொடர்பிலும் சான்றிதழில் குறிப்பிட வேண்டும் என்பதுடன், மரண விசாரணை அதிகாரிகளால் இறப்புச் சான்றிதழ்களில் பதிவிடப்படவும் வேண்டும்.
அதுஅம்ட்டுமல்லாது மரணத்திற்கான காரணத்தை நான்கு விடயங்களின் கீழ் விரிவாகக் குறிப்பிட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் உயிரிழப்பு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இருந்து இடம்பெறும் அனைத்து மரணப் பரிசோதனைகளையும் புதிய இறப்புச் சான்றிதழ்களில் குறிப்பிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்