காஃபியால் மரணமா? வெளியான உண்மைகள்
தினமும் இரு கோப்பை அளவு காஃபி அருந்துவது இதய நோயால் இறக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்கும் என மருத்துவ ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கடுமையான உயர் ரத்த அழுத்தம் அதாவது 160/100 mmHg அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள் 2 அல்லது அதற்கு மேற்பட்ட அளவு காஃபி அருந்துவதால் இதய நோயால் இறக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்குகின்றது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இதனை ஜப்பான் ஒரு ஆய்வில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காபி குடிப்பதால் ஏற்படும் 5 நன்மைகள்
ஒரு நாளில் எத்தனை காபி குடிக்கலாம்?
ஒரு நாளைக்கு 2 அல்லது 3 கோப்பை காஃபி குடிக்கலாம்.சராசரியாக ஒரு கப் காஃபியில் 95 மில்லிகிராம் கஃபைன் கலந்திருக்கும்.
ஏற்கனவே கஃபைன் அதற்கு மேல் பால் மற்றும் சர்க்கரை சேர்த்தால் காஃபியின் நன்மைகளை அழிந்து விடும். எனவே பாலும் சர்க்கரையும் சேர்க்காத ப்ளாக் காஃபியைக் குடித்தால் நன்மை என கூறப்படுகின்றது.
ப்ளாக் காபி பல நன்மைகள் தரவல்லது.பால் சேர்க்காத கருப்பட்டி காபி குடிக்கும் பழக்கம் ஒருசிலருக்கு உள்ளது. 'கடுங்காபி' என்று அந்த காபியை கூறுவார்கள் அதுவும் உடல் நலத்தை மேம்படுத்தும்.
நோய்களுக்கு நோ என்ட்ரி
பல ஆண்டுகள் காஃபி குடிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் குறைவு. கேன்சர், டிமென்ஷியா, அல்ஸீமர் போன்ற மறதி நோய், இதயம், லிவர் சம்மந்தப்பட்ட பிரச்னைகள், பார்க்கின்சன், டைப் 2 டயபடீஸ், உள்ளிட்ட பல நோய்கள் வராமல் தடுக்கும் சக்தியும் காஃபிக்கு உண்டு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஆக்டிவ் எனர்ஜி தரும் காஃபி
காஃபியில் ஆன்டி ஆக்ஸிடெண்டுகள் அதிகம் உள்ளன.அது சுறு சுறுப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவும்.
சூடான காஃபி உடலுக்கு உடனடி தெம்பை அளிக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் காஃபி பீனில் உள்ளது.
காபி குடிக்கும்போது ஹார்மோன்கள் தூண்டப்பட்டு மூளையை சுறுசுறுப்பாக்கும்.உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கச் செய்து தசைகளுக்கு அதிக ரத்தம் அனுப்பப்படுகிறது.
காஃபி குடிக்கும்போது, கண் பார்வை விரியும். சுவாசக் குழாய் நன்கு திறந்து புத்துணர்வு கிடைக்கும். இதன் மூலம் நாம் செய்து கொண்டிருக்கும் வேலையில் தீவிரமாக ஆழ்ந்து உற்சாகத்துடன் செய்ய முடியும்.
காஃபி குடிப்பதால் நீண்ட நாள் வாழலாம்
4,00,000 நபர்கள் பங்கேற்ற ஒரு மாபெரும் ஆராய்ச்சியொன்றின் முடிவில் காஃபி குடிப்பவர்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ முடியும் என்று கண்டறிந்துள்ளார்கள்.
தினமும் இரண்டு கப் காஃபி குடித்தவர்கள் காபி குடிக்காதவர்களை விட 10 சதவிகிதம் அதிக காலம் உயிர் வாழ்ந்தார்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் காஃபி குடிக்கும் பெண்களின் ஆயுள் 13 சதவிகிதம் ஆண்களை விட அதிகமிருந்தது என்பதையும் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்ஸ்ப்ட்டுள்ளது.
ஒவ்வாமை
காஃபி குடிப்பதால் சிலருக்கு படபடப்பு, பதற்றம், தூக்கமின்மை, வயிற்றில் கோளாறு, ப்ராஸ்டேட் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
காரணம் அவர்களுக்கு ஒவ்வாமை இருக்கலாம். காஃபி குடிப்பதால்தான் அத்தகைய பிரச்னைகள் வருகிறது என்று தெரிந்தால், காஃபி குடிப்பதைத் தவிர்ப்பதே நல்லது.
காபி அருந்துபவர்கள் பெரும்பாலும் புகைப் பிடிப்பவர்களாகவும், குறைந்த உடற்பயிற்சி செய்பவர்களாகவும், கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகம் உண்பவர்களாகவும் இருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.