கொழும்பில் காதைக் கிழிக்கும் பட்டாசு சத்தங்கள்!
கொழும்பின் பல இடங்களிலும் ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த போராட்டத்தினால் , பல வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்த மக்கள் பிரதிநிதிகள், அந்த இடங்களுக்கு வருகைதரும் போது, பட்டாசுகள் கொளுத்தப்படுகின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, கொழும்பு-07 இலுள்ள, எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்துக்கு முன்பாக பயணிக்கும் பேரணியில் இணைந்துகொண்டார்.
அதன்போது, சுமார் இரண்டு, மூன்று நிமிடங்களுக்கு அங்கு பட்டாசு கொளுத்தப்பட்ட்டதால் பட்டாசு சத்தம் கொழும்பையே அதிரவைத்ததாக கூறப்படுகின்றது.
தொடர்புடைய செய்தி
முடங்கியது கொழும்பு; ஆயிரக்கணக்கில் மக்கள் முற்றுகை!



