தமிழர் பகுதியில் பகீர் சம்பவம்... உறங்கிகொண்டிருந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாகண்டல் பகுதியில் மாட்டு காவலுக்காக அமைக்கப்பட்ட கொட்டிலில் இருந்து இவ்வாறு சடலம் இன்றையதினம் (18-0-2024) மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் 28 வயதுடைய கந்தையா மோகனதாஸ் எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இதன்போது, உயிரிழந்த நபர் மாட்டு காவலுக்காக சென்றவர் எனவும் குறித்த காவல் கொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த வேளை அவர் உயிரிழந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.