வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்
வெல்லவாய வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கங்பங்குவ பிரதேசத்தில் உள்ள வீட்டில் இருந்தே சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெல்லவாய பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் தொடர்பில் தெரிய வந்தவை
உயிரிழந்தவர் 33 வயதுடைய கங்பங்குவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு அவர் தனது தாய் மற்றும் மூத்த சகோதர சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் குடிப்பழக்கம் உள்ளவர் என்பதும் அயலவர்களுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.