சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட இராணுவ சிப்பாயின் சடலம்
குருசிங்ககொடவில் சிதைந்த நிலையில் இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருசிங்ககொட பிரதேசத்தில் உள்ள கால்வாயில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர்
மட்டக்களப்பு வெல்லாவெளி இராணுவ முகாமில் பணிபுரியும் 35 வயதுடைய விஷான் பிரதீப் விதானச்சி என்ற இராணுவ வீரரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 6ஆம் திகதி வீட்டுக்கு வந்த சிப்பாய் 14ஆம் திகதி வீட்டை விட்டு சென்ற நிலையில் அதன் பின்னர் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பத்தேகம நீதவான் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கராபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.