மன்னார் மதுபானசாலைகளில் விதிக்கப்பட்ட முக்கிய தடை
மன்னார் நகர்ப்பகுதியில் உள்ள மதுபானசாலைகளில் தினமும் காலை 10:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை கள் விற்பனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட உள்ளூர் கள் உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் மன்னார் நகரசபையில் இன்று (28) மதுவரித் திணைக்கள அதிகாரிகள்,மன்னார் பொது சுகாதார வைத்தியாதிகாரி, கள் உற்பத்தியாளர்கள் மற்றும் மதுபானசாலை உரிமையாளர்களுக்கிடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

கள் உற்பத்தியாளர்கள்
மன்னார் நகரசபை தலைவர் வசந்தன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், உள்ளூர் கள் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சந்தைப்படுத்தல் சவால்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களை முறையாக விற்பனை செய்யமுடியாமை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
உள்ளூர் உற்பத்தியாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் மதுபான விற்பைனையாளர்களின் சம்மந்ததுடன் விற்பனை நேரக்கட்டுப்பாட்டு தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது அதன்படி மன்னார் நகர்ப்பகுதியில் உள்ள மதுபானசாலைகளில் தினமும் காலை 10:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை கள் விற்பனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
உள்ளூர் உற்பத்தியாளர்களின் கள் விற்பனையாவதை உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழில் 25 ஆண்டுகால ஆக்கிரமிப்பின் பின் விடுவிக்கப்பட்ட புகழ்பெற்ற ஆலயம் ; முன்னறிவிப்பின்றி வெளியேறிய இராணுவம்
அதே நேரம் தற்போது இயங்காமல் இருக்கும் உயிலங்குளம் கள் உற்பத்தி நிலையத்தை மீண்டும் முழுமையான அளவில் இயங்கச் செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை மதுவரித் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
இதன் மூலம் உற்பத்தியாளர்களின் கள்ளினைத் தரமான முறையில் போத்தல்களில் அடைத்து வெளிமாவட்டங்களுக்கும் சந்தைப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடைமுறைகளை மதுபானசாலை உரிமையாளர்கள் முறையாகப் பின்பற்றுவதை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கண்காணிப்பதோடு, உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டது இந்தத் தீர்மானங்கள் மூலம் மன்னார் மாவட்டத்தின் தென்னை மற்றும் பனைசார் கள் உற்பத்தியாளர்கள் பெரும் நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுவதோடு, உள்ளூர் உற்பத்திகளுக்கான கேள்வி அதிகரிக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.