தனுஷ்க குணதிலக்க தொடர்பிலான 4வது நாள் வழக்கு விசாரணை நிறைவு!
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீதான 4 நாள் பாலியல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணை இன்றுடன் ( 21 ) நிறைவடைந்தது. அத்துடன் இவ்வழக்குத் தொடர்பிலான எதிர்வரும் (28.09.2023) ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளது.
தனுஷ்க கைது செய்யப்பட்ட போது பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலம் முதன்முறையாக ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.
தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (21.09.2023) நான்காவது நாளாக சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கு விசாரணையின் போது புகார் வழங்கிய பெண், தொழிநுட்பத்தினைப் பயன்படுத்தி காணொளி மூலம் முன்னிலையானதுடன் தனுஷ்க தனது வழக்கறிஞர்களுடன் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
குறித்த பெண் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி கேப்ரியல் ஸ்டீட்மன் மற்றும் தனுஷ்கவின் சட்டத்தரணி முருகன் தங்கராசா ஆகியோர் இன்று நீதிமன்றில் இறுதி வாதங்களை முன்வைத்தனர்.
சம்பந்தப்பட்ட பெண்ணை உறவுக்கு சம்மதிக்க வைக்க தனுஷ்க குணதிலக்க பல முயற்சிகளை மேற்கொண்டதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தனுஷ்கவின் சட்டத்தரணி, வாதப் பிரதிவாதத்தை முடித்துக் கொண்டு, தனுஷ்க குணதிலக்க பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டதாக முறைப்பாடு செய்தவர் மீண்டும் மீண்டும் அளித்த சாட்சியங்கள் மிகவும் முரண்பாடானவை என்று கூறினார்.
இதேவேளை, (2022.11.02 )ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தனுஷ்க குணதிலக்க கடந்த 6 ஆம் திகதி கைது செய்யப்பட்ட போது பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தின் காணொளி காட்சியை நீதிமன்றம் முதன்முறையாக வெளியிட்டது.
தொடர்ந்து தனுஷ்க குணதிலக்க மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் (28.09.2023) ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.