உடல்நிலை சரியில்லாத தந்தையை நடுவீதியில் தவிக்கவிட்டுச் சென்ற மகள்!
உடல்நிலையில் சரியில்லாத நிலையில் தனது தந்தையை மகள் வீதியில் விட்டுச் சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இரத்தினபுரி மாவட்டம் எலியகொட- இடங்கொட பிரதான வீதியில் இன்று (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
உடல்நிலையில் சரியில்லாத முதியோர் தான் பலாங்கொட பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தனக்கு மகளும், மகனும் பேரப் பிள்ளைகளும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஊடகவியலாளரிடம் தன்னை வீதியில் விட்டுவிட்டு மகள் வாகனத்திற்கு எரிபொருள் வாங்க சென்றதாக அந்த தந்தை கூறியுள்ளார். நீண்ட நேரமாகியும் மகள் வரதால் பெண் ஒருவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் முதியவரை 1990 அவசர அம்புலன்ஸ் சேவையில் அழைத்துச் சென்று வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

