வெள்ளப்பெருக்கின் பின்னர் காத்திருக்கும் ஆபத்து ; பொலிஸார் எச்சரிக்கை
வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பின்னர், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் கவனமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பில், குறிப்பாக மின்சாரம் மற்றும் எரிவாயு பாதுகாப்பு தொடர்பாக பொது மக்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

மின்சார மூலங்கள்
அதன்படி மின்சார மூலங்களை அணுகுவதற்கு முன்னர், மின் தொழில்நுட்ப வல்லுநரின் ஆய்வை கட்டாயம் பெற வேண்டும் எனவும், ஈரமான எந்தவொரு மின் சாதனங்களையும் பயன்படுத்தக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், வீட்டில் எரிவாயு கசிவு ஏற்பட்டால், அந்தச் சூழலில் எந்த மின்சாரம் அல்லது எரிவாயுவால் இயங்கும் உபகரணங்களையும் இயக்குவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளம் வழிந்தோடிய பகுதிகளில், மின் விபத்துக்கள் மற்றும் எரிவாயு தொடர்பான அபாயங்களைத் தடுக்கும் நோக்கில் இந்த எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.