களுத்துறை கடற்கரையில் மீட்கப்பட்ட பொதியில் ஆபத்தான பொருள்!
களுத்துறை, கட்டுக்குறுந்த கடற்கரையில் இன்று (05) காலை பொதியொன்று மீட்கப்பட்ட நிலையில், அதில் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொதியில் சுமார் 12 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்துள்ளதுடன் அதன் பெறுமதி 3 கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி
கடற்கரையில் கரையொதுங்கிய இந்தப் பொதியை அருகிலுள்ள சுற்றுலா விடுதி ஊழியர்கள் கண்டதுடன் இதுதொடர்பில் பாதுகாப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
யாழ் சந்தைகளில் போதைப்பொருள் வியாபாரிகளின் அட்டகாசம்; கண்டுகொள்ளாத பொலிஸார்; பொது மகன் மீது தாக்குதல்!
பொதியை மேலதிக விசாரணைகளுக்காக எடுத்துச்சென்ற நிலையிலேயே போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை களுத்துறை கட்டுக்குறுந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.