யாழிலும் ஆட்டம் காட்டும் Ditwah புயல்; பலத்த காற்றுடன் அதிகரித்த மழை
Ditwah புயல் காரணமாக நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக பலத்த காற்றுடன் அதிகரித்த மழைவீழ்ச்சியும் பதிவாகி வருகின்றது. இந்த நிலையில் யாழ்.மாவட்டத்திலும் காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகி வருகின்றது.
இதனால் தென்மராட்சி கொடிகாமம் மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் ஏ9 வீதியோரமாக நின்ற மரம் ஒன்று இன்று அதிகாலை வேருடன் சாய்ந்து வீதிக்கு குறுக்காக விழுந்திருந்தது இதனால் வீதியில் ஒரு வழிப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து மழைக்கு மத்தியிலும் அதிரடியாகச் செயற்பட்ட யாழ்.மாவட்ட அரச மரக் கூட்டுத்தாபன அதிகாரிகள் குறித்த இடத்திற்கு விரைந்து வருகைதந்து வீழுந்திருந்த குறித்த மரத்தை அகற்றியுள்ளனர்.
