தீவிர புயலாக மாறிய மண்டாஸ் புயல்!மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை

Sri Lanka Sri Lanka Fisherman
By Shankar Dec 08, 2022 07:26 PM GMT
Shankar

Shankar

Report

வங்காள விரிகுடாவில் தோன்றி வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் 'மண்டாஸ்' புயலானது தீவிர புயலாக மாறியுள்ளது.

இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை (09.12.2022) நள்ளிரவுக்கும் நாளை மறுதினம் (10.12.2022) காலைக்கும் இடையில் இந்தியாவின் தமிழக மாநிலத்தின் மரக்காணத்துக்கும் மகாபலிபுரத்துக்கும் இடையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று யாழ்.பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் காலநிலை அவதான நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

தீவிர புயலாக மாறிய மண்டாஸ் புயல்!மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை | Cyclone Mandous Warning For Fishermen Sri Lanka

இன்றுமாலை(08) வெளியிட்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பிலான செய்திக்குறிப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புயலின் தற்போதைய நிலையில் இதனால் இலங்கையின் எப்பகுதிக்கும் நேரடியான பாதிப்பு கிடையாது.

ஆனால் எதிர்வரும் 11.12.2022 வரை வடக்கு மாகாணத்தின் முழுப் பிரதேசத்துக்கும், கிழக்கு மாகாணத்தின் முழுப்பிரதேசத்துக்கும் மற்றும் வடமத்திய மாகாணத்தின் சில பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

தீவிர புயலாக மாறிய மண்டாஸ் புயல்!மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை | Cyclone Mandous Warning For Fishermen Sri Lanka

அத்தோடு நாளையும் நாளை மறுதினம் காலை வரையும் இன்றுடன் ஒப்பிடும்போது காற்றின் வேகம் அதிகரித்தும் காணப்படும்.

கடற்கரைப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-65 கி.மீ. வரையும் உள் நிலப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 35-45 கி.மீ. வரையும் வீசும் வாய்ப்புள்ளது. இன்றைய தினம் வளிமண்டல வெப்பநிலை 22 பாகை செல்சியஸ் ஆக காணப்படுகின்றது.

ஆனால் உணரக்கூடிய வெப்பநிலையானது ( Feeling Temperature) 18 பாகை செல்சியஸ் ஆக உள்ளது. இன்றைய தினம் வளிமண்டல சாரீரப்பதன் அளவு 88% ஆக உள்ளது. இன்று இரவும் நாளையும்(09.12.2022) வெப்பநிலை மேலும் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீவிர புயலாக மாறிய மண்டாஸ் புயல்!மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை | Cyclone Mandous Warning For Fishermen Sri Lanka  

அத்தோடு ஈரப்பதன் அளவு மேலும் அதிகரிக்கும் என்பதனால் உணரக்கூடிய வெப்பநிலை அளவு மேலும் குறைவடையலாம்.

இதனால் இன்றையை விட நாளை இன்னமும் குளிரான வானிலை நிலவக்கூடும். சற்று வேகமான காற்றுடன் கூடிய தொடர்ச்சியான மழை, ( சிலவேளைகளில் இடிமின்னலுடனும் மழை கிடைக்க கூடும்) குளிரான வானிலை, குறைவான கட்புலனாகு தன்மை( Visibility) போன்ற வானிலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நாளைய தினம் ஆகக் குறைந்தது ஆரம்ப பிரிவு பாடசாலை மாணவர்களுக்காவது விடுமுறையை அறிவிப்பது உசிதமானது.

தீவிர புயலாக மாறிய மண்டாஸ் புயல்!மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை | Cyclone Mandous Warning For Fishermen Sri Lanka  

அத்தோடு முதியவர்கள், நோயாளிகள் மற்றும் ஏனையவர்கள் நாளைய தினம் நடமாட்டத்தை குறைப்பது நன்மை தரும். 'மண்டாஸ்' புயலின் காரணமாக கடல் அலைகள் உயர்வாக இருக்கும் என்பதனால் எத்தகைய காரணத்தைக் கொண்டும் கடற்கரைப் பகுதிகளுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது என அதில் குறிப்பிட்டுள்ளார்.


Gallery
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
நன்றி நவிலல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US