மிதிவண்டியில் வந்தவர் பெண்களிடம் சில்மிசம்; தேடுதல் நடத்தும் லண்டன் பொலிஸார்!
லண்டனில் ஒரு நபர் ஒரே மாதத்தில் ஏழு பெண்களை துன்புறுத்திய சம்பவம் தொடர்பில், அந்நாட்டு பொலிஸாரால் முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. லண்டனில், ஒரு நபர் சில பெண்களை குறிவைத்து, மிதிவண்டியில் அவர்களை பின்தொடர்ந்து செல்வதையே வேலையாக வைத்திருந்துள்ளார்.
இது குறித்து பொலிஸார் கூறியுள்ளதாகவும் , இதில் டவர் ஹெம்லெட்ஸ் என்ற பகுதியில் தான் அதிகமான சம்பவங்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை நடந்திருக்கிறது.
அந்த நபர், பல தடவை பெண்களுக்கு முன்பு நின்றுகொண்டு அருவருப்பான செயல்களை செய்துள்ளார், அந்த நபர் கருப்பு மற்றும் சாம்பல் நிறத்திலான மிதிவண்டியில் வந்ததாகவும், முகக்கவசம் அணிந்திருந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த நபரது புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸார், சந்தேக நபர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் தங்களிடம் தெரிவிக்குமாறும் கூறியுள்ளனர்.