இலங்கைப் பெண் ஜனனியுடன் நடிக்கவுள்ள குக்வித் கோமாளி பிரபலம்!
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்தான் இலங்கைப் பெண் ஜனனி.
இவ்வாறான நிலையில் தற்போது ஜனனி நடிக்கும் ஆல்பம் பாடல் குழுவில் குக் வித் கோமாளியை சேர்ந்த ஓட்டேரி சிவாவும் நடிக்க இருப்பதாக ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சமீபத்தில் ஜனனி ஆல்பம் படப்பிடிப்பின் பூஜையில் கலந்து கொண்ட புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.
குறித்த ஆல்பத்தில் அவருடன் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட ஓட்டேரி சிவாவும் ஆல்பம் குழுவினருடன் இருக்கிறார்.
அவரும், ஆல்பம் பாடலுக்கு நடிக்கின்றாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, ஜனனியின் ஆல்பம் வெற்றி பெற அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.