கறிவேப்பிலையை தூக்கி எறிபவரா நீங்க... இதை படிங்க!
நாம் சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்தும் கறிவேப்பிலை வாசனைக்காக பயன்படுத்தப்பட்டாலும், பெரும்பாலானவர்கள் கறிவேப்பிலை சாப்பிடும்போது ஒதுக்கி எறிந்து விடுகின்றோம்.
ஆனால் நாம் தூக்கி வீசும் கறிவேப்பிலையில் ஆரோக்கிய பலன்கள் ஏராளம் உள்ளது. அவை என்ன என்பதை பார்க்கலாம்...

ஆரோக்கிய பலன்கள்
நீரிழிவு
கறிவேப்பிலையை உணவில் சேர்ப்பது என்பது சுவைக்காக மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்காகவும் மிக அவசியம்.
கறிவேப்பிலையில் உள்ள ஃபைபர் மற்றும் பிற சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவுகின்றன.

இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது செரிமான நொதிகளை தூண்டி, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது.
முடி அடர்த்தி
இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் புரதச்சத்துக்கள் முடி உதிர்வதைத் தடுத்து, முடி அடர்த்தியாக வளர உதவுகின்றன. கறிவேப்பிலையில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகமாக உள்ளது.

கண் பார்வை
இது இரத்த சோகையை எதிர்த்துப் போராட உதவுகிறது. வைட்டமின் ஏ சத்து இதில் இருப்பதால், கண் பார்வை குறைபாடுகளைத் தடுக்கவும், கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் இது உதவுகிறது.
எனவே, கறிவேப்பிலையை ஒதுக்கி வைக்காமல், தினமும் உணவில் சேர்த்து அதன் முழு பலனையும் பெறுவது அவசியம்.
