ஒரு கொப்பரை தேங்காயில் தீராத கடன் பிரச்சனையும் தீர்ந்து விடுமாம்
இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த கடன் பிரச்சனை இருக்கத் தான் செய்கிறது.
இது அவர்களின் கட்டுக்குள் இருந்தால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சென்று விடும்.
ஒரு சிலருக்கு அவர்களுடைய வருமானத்திற்கு மீறிய கடன் சுமை ஏற்பட்டு அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பார்கள்.
இப்படியானவர்கள் கடனில் இருந்து வெளி வந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ ஆன்மீகம் நமக்கு அற்புதமான பரிகாரத்தை தந்திருக்கிறது.
கடன் அடைய பரிகாரம்
இதை செய்வதற்கு முன்பாக கடன் வாங்க வேண்டிய அவசியத்தை முடிந்த வரை தவிர்க்க பாருங்கள்.
அத்தியாவசிய தேவைக்காக கடன் வாங்கி அதில் சிக்கி தவிப்பவர்களுக்கு அவர்களுடைய கர்ம பலன் ஒரு முக்கிய காரணமாகவே கருதப்படுகிறது.
இப்படி எந்த சூழ்நிலையில் கடன் வாங்கி இருந்தாலும் இந்த பரிகாரத்தின் மூலம் அதை சரி செய்யலாம் என்று நம்பப்படுகிறது.
அரச மரத்தடி பரிகாரம்
இந்த பரிகாரத்தை சனிக்கிழமை தான் செய்ய வேண்டும்.
இந்த பரிகாரத்தை நாம் அரச மரத்தடியில் தான் செய்யப் வேண்டும்.
அரசமரத்தடியில் செய்யும் எந்த பரிகாரமும் சனிக்கிழமையில் தான் செய்ய வேண்டும்.
ஏனெனில் சனிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயார் விஷ்ணு சமேதராய் வந்து அங்கு வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு.
அந்த நேரத்தில் நாம் செய்யும் பரிகாரம் பல மடங்கு பலனை கொடுக்கும்.
இந்த பரிகாரத்திற்கு ஒரு முழு கொப்பரை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதன் மேல் சிறிதாக ஒரு துளை போட்டு பாதி அளவு சர்க்கரையும், பாதி அளவு கருப்பு எள்ளையும் போட்டு நிரப்ப வேண்டும்.
பரிகாரத்தை செய்யும் முறை
துளை போட்டு எடுத்த அந்த சிறிய துண்டு கொப்பரையை தேங்காயில் வைத்து மூடி விடுங்கள்.
இப்போது இந்த கொப்பரை தேங்காயை அரசமரத்தடியில் மண்ணுக்குள் புதையும் அளவிற்கு தோண்டி புதைத்து விட்டு அரசமரத்தை சுற்றி வணங்கி விட்டு வந்து விடுங்கள்.
இதில் இருக்கும் எள் சனீஸ்வர ஆதிக்கத்தை குறிக்கும்.
சர்க்கரை சுக்கிர பகவானையும் சந்திர பகவானுக்குரியதாக இருக்கும்.
அரச மரமானது அனைத்து தெய்வங்களுக்கும் பிரதானமான ஒன்று.
அதிலும் சனிக்கிழமையில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்யக் கூடிய இடம்.
எத்தனை விஷயங்களும் ஒன்றாக சேர்த்து இதை நாம் பூமியில் புதைத்து வைக்கும் போது அதற்கான பலன் வேறு வகையில் நமக்கு வரும்.
கடன் சுமை முற்றிலுமாக தீர்ந்து விடும்
கிரகங்களினால் ஏற்படும் கோளாறாக இருந்தாலும் கூட அதிலிருந்து விடுபட்டு இந்த கடன் சுமை முற்றிலுமாக தீர்ந்து விடக் கூடிய வாய்ப்பு வரும்.
ஒரு வேளை மூன்று வாரத்தில் முழு கடனும் அடையவில்லை என்றாலும் இந்த கடனை அடைப்பதற்கான வழி நிச்சயம் கிடைக்கும் என்று சாஸ்திரம் சொல்கிறது.
ஆகையால் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை தொடர்ந்து மூன்று வாரங்கள் செய்து வந்தால் தீராத கடன் பிரச்சினை தீர்த்து நிம்மதியாக வாழ வழி தேடி கொள்ளலாம்.