வீதியைவிட்டு விலகிய இ.போ.ச; ஐவருக்கு நேர்ந்த நிலை
Badulla
Sri Lanka
Accident
Srilanka Bus
By Sulokshi
பதுளை, எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்பே பிரதேசத்தில் இ.போ.ச பேருந்து விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று (6) சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. பெத்தேவெலவிலிருந்து பண்டாரவளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த சுவரில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
விபத்தின் போது பஸ்ஸில் 18 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் தெமோதரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US