மக்களுக்கு அஞ்சி சொந்த இடங்களுக்கு செல்லவிரும்பாத அமைச்சர்கள்!
நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் எதிர்ப்பு அலை காரணமாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் உள்ள தமது உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கியிருக்க விரும்புவதாக நாடாளுமன்ற தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கிராம மட்டத்தில் இடம்பெறும் போராட்டங்களின் போது தங்களின் வீடுகளும் தாக்கப்படும் என்கின்ற அச்சம் அமைச்சர்கள் மத்தியில் எழுந்துள்ளமையே இதற்கு காரணமாகும்.
அதேவேளை, இரண்டு அல்லது மூன்று கார்களை வைத்திருக்கும் அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கார்களை நண்பர்களின் வீடுகளில் மறைத்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் பாதுகாப்பு தரப்பினரும் இது குறித்து எச்சரித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் கடந்த சில நாட்களாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களின் பல வீடுகளை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.