இலங்கை முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரின் கடுமையான எச்சரிக்கை!
இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி மக்கள் அமைதியான முறையில் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுத்து வருகின்றது.
இந்த நிலையில் மக்களின் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் தொடர்பில் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் சனத் ஜெயசூரிய (Sanath Jayasuriya) டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில்,
“ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்று நாம். இந்த நாட்டு மக்களைக் காக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டீர்கள் உங்களை அல்ல.
We are one of the oldest democracies in Asia. You swore an oath to protect the people of this country not your self. Do not test the people of this country again as I said before you are sitting on a powder keg playing with fire ! #GoHomeGota now
— Sanath Jayasuriya (@Sanath07) July 8, 2022
நான் முன்பு சொன்னது போல் இந்த நாட்டு மக்களை மீண்டும் சோதித்து பார்க்காதே , பொடியில் அமர்ந்து நெருப்புடன் விளையாடுகிறாய் ! #GoHomeGota இப்போது”என அதில் குறிப்பிட்டுள்ளார்.