ஒரே ஒரு கதையால் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த இலங்கை தமிழ் பெண் ஜனனி!
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 6 யில் போட்டியாளராக ஜனனி அறிமுகப்படுத்தப்பட்டபோதே அவருக்கான ரசிகர்கள் கூட்டம் உருவாக ஆரம்பித்து விட்டது.
பிக் பாஸில் இன்னும் ஒரு லொஸ்லியாவாக இலங்கைப் பெண்ணான ஜனனியை அவரது ரசிகர்களால் கொண்டாடி வருகிறார்கள். இதற்கு அடுத்து ஜனனியை இப்பொழுதே சின்ன த்ரிஷா, அடுத்த சாய்பல்லவி என்று பட்டம் கொடுத்து அழைக்க ஆரம்பித்து விட்டனர்.
ஜனனியின் வாழ்க்கை டிப்ஸ் தொடர்பிலான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் நகைச்சுவையாகவும், வைரலாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறது.
புதிய நண்டு கதை
நண்டை வைத்து பல கதைகள் சொல்லப்பட்டு இருக்கும் நம்ம ஊரில் தற்பொழுது அதே நண்டை வைத்து வாழ்க்கை தத்துவத்தை கூறியுள்ளார் ஜனனி.
எவ்வளவோ கஷ்டப்பட்டு நண்டின் கூட்டை உடைத்து உள்ளிருக்கும் சிறு சதை பகுதியை சாப்பிடுவது தான் ருசி அதை போல் தான் வாழ்க்கையும், மிகவும் கஷ்டப்பட்டால் தான் வாழ்க்கையில் சிறிய அளவு சந்தோஷம் கிடைக்கும் என்றும், கேட்பதற்கு கொஞ்சம் மொக்கையாகத் தான் இருக்கும் இருந்தாலும் கேட்டுக்கோங்க என்று க்யூட்டாக கூறியுள்ள காணொளி ஜனனி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.