மட்டக்களப்பில் இயங்கிவரும் பிரபல உணகத்திற்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!
மட்டக்களப்பு நகரில் இயங்கிவரும் பிரபல உணவகம் ஒன்றை எதிர்வரும் 22ம் திகதிவரை தற்காலிகமாக மூடுமாறு இன்று 18) உத்தரவு பிறப்பித்ததையடுத்து உடன் பொது சுகாதார பரிசோதகர்கள் உணவகத்தை மூடி சீல் வைத்துள்ளனர்.
சுகாதார ஒழுங்கு விதிகளை மீறி கழிவு நீரை வெளியில் திறந்துவிட்ட மற்றும் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோழி இறைச்சியை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை தொடர்பாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த உணவகத்தின் கழிவு நீர் வெளியேறி வீதிகளிலும் வடிகான்களிலும் தேங்கி நிற்பதுடன் அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசி வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாக பொது சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடு தெரிவித்து வந்தனர்.
குறித்த உணவகத்தை புளியந்தீவு பொது சுகாதார பரிசோதகர் ஜெ.யசோதரன் தலைமையிலான பரிசோதகர்கள் முற்றுகையிட்டு பரிசோதனையிட்டுள்ளனர்.
இதன் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோழி இறைச்சியை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமையை கண்டுபிடித்து கைப்பற்றியதுடன் சுகாதார ஒழுங்கு விதிகளை மீறி கழிவு நீரை வெளியில் திறந்துவிட்ட வந்துள்ளதை கண்டுபிடித்தனர்.
இந்த சுகாதார சீர்கேடு தொடர்பாக 1980ம் ஆண்டு 26 ம் இலக்க உணவு சட்டத்தின் 13 (1) ஆம் பிரிவின் கீழ் குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது பொது சுகாதார பரிசோதகர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஞாயிற்றுக்கிழமை (18) வழக்கு தாக்குல் செய்ததுடன் குறித்த உணவகத்தின் மீது கடந்த மாச் மாதம் 14 ம் திகதி மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவு வைத்திருந்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளி என இனங்காணப்பட்டு தண்டப்பணம் செலுத்தினர் என நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து நீதவான் உடனடியாக குறித்த உணவகத்தை எதிர்வரும் 22ம் திகதிவரை தற்காலிகமாக மூடீ சீல்வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதனையடுத்து மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் யோகேஸ்வரன் மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் வேணிதரன், கோட்டமுனை பிரிவு பொது சுகாதர பரிசோதகர் ரி.மிதுன்ராஜ், புளியந்தீவு பொது சுகாதார பரிசோதகர் ஜெ.யசோதரன் ஆகியோர் குறித்த உணவகத்தை முற்றுகையிட்டு மூடி சீல் வைத்தனர்.