செவ்வந்தியுடன் கைதான யாழ் தக்ஷிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரும், கும்பல் தலைவர் எனக் கூறப்படும் இஷார செவ்வந்திக்கு உதவிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நந்த குமார் தக்ஷி மற்றும் மற்றொரு சந்தேக நபரை ஜனவரி 9 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களும் இன்று (07) கொழும்பு குற்றப்பிரிவால் கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

விளக்கமறியல் உத்தரவு
பின்னர் சந்தேக நபர்களை ஜனவரி ஒன்பதாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலைக்குப் பின்னணியில் இருந்த இஷாரா செவ்வந்தி மற்றும் பாதாள உலக உறுப்பினர்கள் உட்பட மேலும் நான்கு பேரும் நேபாளத்தில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.