யோஷித ராஜபக்ச தொடர்பில் நீதிம்னறம் பிறப்பித்த உத்தரவு
மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் டெய்சி ஃபாரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, வரும் நவம்பர் 3 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (28) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, யோஷித ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் இரண்டாவது சந்தேகநபரான டெய்சி ஃபாரஸ்ட் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

சட்டவிரோதமான முறையில் பெற்ற 57 மில்லியன் ரூபாய்
அவரின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, மருத்துவ அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதிபதி, வழக்கை 2026 நவம்பர் 3ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க உத்தரவிட்டார்.
சட்டவிரோதமான முறையில் பெற்றதாகக் கூறப்படும் சுமார் 57 மில்லியன் ரூபாய் பணத்தை மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டதன் மூலம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததாகக் குற்றம்சாட்டி, யோஷித ராஜபக்ச மற்றும் டெய்சி ஃபாரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.