தாயின் இறுதிச்சடங்கு ;முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் மனைவிக்கு பிடியாணை!
முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்வதற்கான பிடியாணையை கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன இன்று (16) பிறப்பித்தார்.
முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவிக்கு எதிராக விசாரிக்கப்பட்டு வரும் ஒரு வழக்கில் அரவிந்த டி சில்வாவும் அவரது மனைவியும் ஜாமீன்தாரர்களாக ஆஜராகியுள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் பிடியாணை
இன்று வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் இந்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டன.
கபில சந்திரசேன அரவிந்த சில்வாவின் வீட்டில் இருந்தபோது உயிரிழந்தார். சிசிடிவி மற்றும் பிற ஆதாரங்கள் இல்லாதபோதிலும், மரணத்திற்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது.

இதற்கிடையில், அரவிந்த டி சில்வாவின் தாயார் திருமதி ராணி டி சில்வா 14ஆம் தேதி காலமானார்.
அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறவிருந்தன. இறுதிச் சடங்கு காரணமாக அவரால் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறபிக்கப்பட்டுள்ளது.