துப்பாக்கிச் சூடு சம்பவம் ; சட்டத்தரணிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
சட்டத்தரணி தினேஷ் தொடம்கொடவை கைது செய்வதைத் தடுக்கும் வகையில்,மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவால் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உதவியதாக, சட்டத்தரணி தினேஷ் தொடம்கொடவின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இடைக்கால உத்தரவு
இந்தநிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த கே. பெர்னாண்டோ ஆகியோரால் பிறப்பிக்கப்பட்ட குறித்த இடைக்கால உத்தரவு 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒரு சட்டத்தரணியாக, தனது கடமைகளை நிறைவேற்றுவதில் துசித ஹல்லோலுவவுக்கு தொழில்முறை சேவைகளை மட்டுமே வழங்கியதாக மனுதாரரான சட்டத்தரணி தினேஷ் தொடம்கொட மன்றில் தெரிவித்தார்.