இந்த விஷயங்களுக்காக தம்பதிகள் சண்டை போட்டுக்கொள்ள வேண்டுமாம்! காரணம் என்ன தெரியுமா?
உறவுகள் என்று வரும் போது மோதல் என்பதும் தவிர்க்க முடியாதது. இது எல்லா உறவுகளுக்கும் பொருந்தும். அதிலும் லைஃப் பார்ட்னருடன் சண்டை ஏற்படுவதை நிச்சயம் தவிர்க்கவே முடியாது. தம்பதிகளுக்குள் நிகழும் மோதல் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டுமே தவிர மிகுந்த வேதனை அளிக்கும் வகையில் இருக்க கூடாது.
மாறாக மரியாதை குறைவற்ற தன்மையான வார்த்தைகளை பயன்படுத்தி, அதே சமயம் உங்கள் தரப்பு வாதத்தை முறையாக வெளிப்படுத்தி சண்டையிடலாம்.

உறவை பாதுகாக்க :
உங்கள் ரிலேஷன்ஷிப் ஆரோக்கியமாக இல்லை என்பதை நீங்கள் உணர்ந்தால் அதை சரி செய்ய மென்மையான வழிமுறைகளை கையாளலாம். இருவருக்குள்ளும் இருக்கும் உறவு செல்லும் பாதைக்கு நீங்கள் இருவரும் உடன்படவில்லை என்றால் அது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். ஆரோக்கியமான உறவின் அடையாளம் பொதுவான ஒரு மோதல் என்பதால் உறவை இயல்பாக்க தயக்கமின்றி சிறு சிறு விவாதங்கள் மற்றும் மோதல்களில் ஈடுபடுவது தவறில்லை.
வீட்டு கடமைகள் :
நவீன கால வாழ்க்கையில் இன்னும் பழைய விதிகளையே கடைபிடித்து கொண்டு இருந்தால் அது ஆரோக்கியமான உறவாக இருக்காது. பல பெண்கள் குடும்பத்திற்காக வேலைகளுக்கும் சென்று திரும்பிய பின், வீட்டிலும் வந்து சமைப்பதிலிருந்து பாத்திரங்களை கழுவுவது அனைத்து கடமைகளையும் செய்வது பெரும் சுமையாகவே இருக்கும்.
மனம் மற்றும் உடல்நலன் பாதிக்கப்படுவதால் உறவுகள் சுமுகமாக இருக்காது. ஈகோ பார்க்காமல் வீட்டு வேலைகள் மற்றும் கடமைகளை இருவரும் சரி சமமாகவோ அல்லது சில வேலைகளை பிரித்து கொண்டு செய்யலாம் என்பதற்காக எழும் விவாதங்கள் அவசியம். இதுவும் ஆரோக்கியமான மோதலாக இருப்பது அவசியம்.
பர்சனல் ஸ்பேஸ் :
தம்பதியர் உறவில் இருந்தாலும் அவரவருக்கான சொந்த அடையாளங்கள் மற்றும் நேரம் இருக்க வேண்டும். இருவருமே அவரவர் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பது அவசியம். நீங்கள் உங்கள் பார்ட்னருடன் எப்போதுமே ஒன்றாக இருந்தாலும் சுதந்திரமாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அதேபோல நீங்களும் அவரை சுதந்திரமாக இருக்க விட வேண்டும். இதற்காக ஏற்படும் விவாதங்கள் மற்றும் மோதல்களின் முடிவு சுமுகமாக இருக்க வேண்டும்.

நிதி விவகாரம் :
தம்பதியர்களுக்குள் எழும் முக்கிய சண்டை பணத்தை செலவழிப்பது குறிதாகவே இருக்கும். ஒருவர் அவசிய செலவுகளை மட்டுமே செய்ய வேண்டும் என்பதும் மற்றவர் நிதி சூழலை நினைக்காமல் பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாவிற்கு செலவு செய்ய வேண்டும் என்று சண்டையிடுவதும் பொதுவாக நிகழும். இதில் தவறில்லை என்றாலும் யார் பணம் சம்பாதிக்கிறார்களோ அதை செலவிடும் உரிமை அவர்களுக்கும் உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நெருக்கம் :
தம்பதியராக இருந்து விட்டு நெருக்கம் இல்லாமல் இருந்தால் சண்டை வருவது இயல்பு. ஒவ்வொரு தம்பதியரின் உறவிலும் பாலியல் வாழ்க்கை முக்கிய அம்சம். இதில் பிரச்சனை எழும் போதே சிறிய மோதலுடன் பேசி தீர்த்து கொள்வது நல்லது.
இதேவேளை மோதல் மற்றும் கருத்து வேறுபாடுகள் இன்றி இருக்கும் ஒரு உறவு நிச்சயம் சுவாரஸ்யத்தை தராது, சலிப்பையே தரும் என்பது உளவியலாளர்களின் கருத்து.