வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த தம்பதியினருக்கு நேர்ந்த சோகம்
கொழும்பு வாகன விபத்தில் இளம் தம்பதியினர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் கொழும்பு - கடுவெல பிரதேசத்தில் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைக்குத் தம்பதியினரை ஏற்றிச் சென்ற ஓட்டோ மீது பின்னால் வந்த லொறி மோதியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த தம்பதி
இவ் விபத்தில் ஓட்டோவில் பயணித்த 27 வயதுடைய கணவனும், 25 வயதுடைய மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
34 வயதுடைய ஓட்டோ சாரதி படுகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லொறியின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.