பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகளை தாக்கிய தம்பதியினர்
பிலியந்தலையில் தம்பதியினர் பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் இருவரை தாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
கணவன் மற்றும் மனைவி ஆகியோரைக் கைது செய்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் விசாரணை
குறித்த குழுவினர் பொலிஸாரை சுற்றிவளைத்து தாக்கும் போது பிரதான சந்தேக நபரின் மகன் ஒருவரின் கைத்தொலைபேசியில் வீடியோ எடுக்கப்பட்டமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான தம்பதியின் இரு மகன்கள் உட்பட பலர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (25) இரவு இடம்பெற்ற பிலியந்தலை பொலிஸ் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த இரண்டு கான்ஸ்டபிள்களே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.