விமான நிலையம் சென்றபோது விபத்தில் சிக்கிய தம்பதி
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வெளிநாட்டு தம்பதியரை ஏற்றிச் சென்ற கார், விபத்தில் சிக்கியுள்ளது. கொட்டாவை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதிவிபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விபத்தில் , வெளிநாட்டு தம்பதி உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக நெடுஞ்சாலை சுற்றுலா பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
இத்தாலிய தம்பதி (76-78) மற்றும் அநுராதபுரம் பந்துலகமைச் சேர்ந்த 42 வயதான சாரதி ஆகியோரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
வெளிநாட்டுக் கணவனும் மனைவியும் நேற்று இரவு 09 மணியளவில் தமது பயணத்தை முடித்துக் கொண்டு இத்தாலி செல்வதற்காக காரில் ஹிக்கடுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றபோதே இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.