பங்கருக்குள் இருந்துகொண்டு நாட்டை ஆளும் கோட்டா!
பங்கருக்குள் இருந்துகொண்டு நாட்டை ஆளாமல் உடனடியாக பதவி விலகிச்செல்லுங்கள் என ஜனாதிபதி கோட்டாய ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தியுள்ளார்.
பிரதமரை நீக்கும் அதிகாரம் 19 ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதிக்கு இருக்கவில்லை என்றும் ஆனால் 22 இல் நீக்க முடியும் என்ற ஏற்பாடு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அமைச்சு பதவிகளை வகிப்பதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. எனவே, 19 தான் 22 ஆக வருகின்றது என்ற கூற்று தவறு என குறிப்பிட்ட ரஞ்சித் மத்தும பண்டார மகாநாயக்க தேரர்கள் கூறியதுபோல சர்வக்கட்சி அரசாங்கம் நாட்டில் அமைய வேண்டும் என்றும், அதற்கான வாய்ப்பை பதவி விலகி ஜனாதிபதி வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.