நாட்டின் நெருக்கடியை உடனடியாக சமாளிக்க முடியும்!
நாட்டில் நிலவும் நெருக்கடியை உடனடியாக சமாளிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அத்துரலியே ரத்தன தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
அதோடு எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளை மூன்று மாதங்களுக்குள் நீக்க முடியும் என தெரிவித்த தேரர், நாடு உணவு நெருக்கடியை எதிர்கொள்வதை தடுக்க முடியும் என தேரர் கூறினார்.
சில தரப்பினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் போர்த்துகீசியம் மற்றும் ஆங்கிலேய பாணியிலான அரசியற் கொள்கையைப் பின்பற்றிய கடைசி அரசியல்வாதி ஜனாதிபதி விக்கிரமசிங்க என தெரிவித்த தேரர், அவருக்குப் பின்னர் ஒரு புதிய சகாப்தம் தொடங்கும் என்றும் இதன்போது தெரிவித்தார்.