தலைவர்கள் என்போர் டிரைவர்களை போன்றோரே!
அநேகர் நாட்டின் தலைவர்தான் நாட்டின் முடிவுகளை எடுக்கிறார் என நினைக்கிறார்கள். அப்படி எடுக்கும் நாடுகள் தோற்றுப் போகின்றன. அறிவாளிகளது ஆலோசனையை பின்பற்றும் தலைவர்கள் உள்ள நாடுகள் செல்வ செழிப்பில் திளைக்கின்றன.
அதனால்தான் வெற்றி பெற்ற நாடுகளில் தலைவர்கள் மாறினும், பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கைள் பெரிதாக மாறுவதே இல்லை. உள்நாட்டு பொறிமுறைகளில் மக்களுக்கு தேவையான மாற்றங்கள் நிகழ்கின்றன.
பெரும்பாலும் தோல்வியடைந்த அல்லது தோலியடைந்து வரும் நாடுகளை பார்த்தால் அங்கு தலைவர்களுக்கு ஆலோசகர்கள் இல்லை. அடிமைகளே இருக்கிறார்கள். ஆலோசகர்களை அறிவற்ற தலைவர்கள் விரும்புவதில்லை.
வாகனத்தை செலுத்த ஒரு டிரைவர் தேவையே தவிர, டிரைவருக்கு ஒரு வாகனம் தேவையில்லை. ஒரு போட்டியில் வெல்வது ஒரு டிரைவராக இருக்கலாம். ஆனால் அந்த வாகனத்தை உருவாக்க பல விஞ்ஞானிகளோடு, அநேகர் பாடு பட்டுள்ளனர்.
அவர்களது அயராத உழைப்பு மற்றும் பங்களிப்பாலேயே அந் வாகனம் சிறப்பாக இயங்குகிறது. அது சிறப்பாக இயங்குவதால் டிரைவர் வெற்றி பெறுகிறார். என குறித்த கருத்தை ஜீவன் பிரசாத் என்ற சமூக ஆர்வலர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.